அழகில் சிறந்தது உன் முகம் ஆசையில் துடிப்பது என் மனம் மனம் கூட மகிழ்ச்சி அதுவும் உன் மடியில்..
மனதில் எழுந்த வார்த்தைகளை சொல்ல துடிக்குது என் உதடுகள் மறைக்க சொல்கிறது என் கண்கள். தவிப்பது என் மனம்., தவிர்ப்பது உன் குணம்., ஏனோ புதிய பதட்டங்கள்., புதிய குழப்பங்கள்., என்றாவது உன் கண்கள் என்னை தேடும்., அன்று உன் கண்களுக்குள் என்னை தேடிப்பார் உன் கண்களில் வரும் கண்ணீராக வருவேன்.. விடைபெற்று செல்கிறேன்...
கையில் எடுத்த பேனா தானாக எழுதுகிறது உன் பெயரை., உடன் என் பெயரையும் எழுதி ரசிக்கிறது என் கண்கள்.. கைகளும் கண்களும் ஜோடிப் போட்டு ரசிக்க நம்மை மிஞ்சி விடும் போலும்..
கருவறையில் இருந்து இறங்கி கல்லரையை நோக்கி நடக்கும் பயணம் தான் இந்த வாழ்க்கை. பயணத்தில் எத்தனை காயங்கலடா அதிலும் எத்தனை வலிகலடா
இரவில் தோன்றும் கனவுகள் பொய்யாகி விடுகின்றது காலையில்.. நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும் என்ற நம்பிக்கையில்.. உறக்கமற்ற இரவுகளுடன் பயணித்து கொண்டிருக்கிறேன்..
அழ வைப்பது அவன் என்று தெரிந்தும்.. அடம்பிடிக்குது என் கண்கள் அவனை காண...