Friday, March 30, 2012

கண்கள் கலங்க வைக்கும் உறவு.




உண்டியலான என் மனதில் 
காதல் காசுகளை சிறுக சிறுக சேமித்தேன்
என் வேதனையை என் காதலுக்கு 
என்னால் உணர்த்த முடியவில்லை
திக்கு திசை தெரியாமல் ஓடிக் 
கொண்டிருக்கும் என் வாழ்க்கை
மனமோ மரணம் என்ற 
நிம்மதியை தேடுகிறது

Thursday, February 9, 2012


அழகில் சிறந்தது உன் முகம்
ஆசையில் துடிப்பது என் மனம்
மனம் கூட மகிழ்ச்சி அதுவும் உன் மடியில்.. 

மனதில் எழுந்த வார்த்தைகளை 
சொல்ல துடிக்குது என் உதடுகள்
மறைக்க சொல்கிறது என் கண்கள்.
தவிப்பது என் மனம்.,
தவிர்ப்பது உன் குணம்.,
ஏனோ புதிய பதட்டங்கள்.,
புதிய குழப்பங்கள்.,
என்றாவது உன் கண்கள் 
என்னை தேடும்., அன்று
உன் கண்களுக்குள்
என்னை தேடிப்பார்
உன் கண்களில் வரும் 
கண்ணீராக வருவேன்..
விடைபெற்று செல்கிறேன்...

கையில் எடுத்த பேனா
தானாக எழுதுகிறது உன் பெயரை.,
உடன் என் பெயரையும்
எழுதி ரசிக்கிறது என் கண்கள்..
கைகளும் கண்களும் 
ஜோடிப் போட்டு ரசிக்க
நம்மை மிஞ்சி விடும் போலும்..

கருவறையில் இருந்து இறங்கி
கல்லரையை நோக்கி நடக்கும்
பயணம் தான் இந்த வாழ்க்கை.
பயணத்தில் எத்தனை காயங்கலடா
அதிலும் எத்தனை வலிகலடா

இரவில் தோன்றும் கனவுகள்
பொய்யாகி விடுகின்றது காலையில்..
நிறைவேறாத ஆசைகள்
நிறைவேறும் என்ற நம்பிக்கையில்..
உறக்கமற்ற இரவுகளுடன்
பயணித்து கொண்டிருக்கிறேன்..

அழ வைப்பது அவன் என்று தெரிந்தும்.. 
அடம்பிடிக்குது என் கண்கள் அவனை காண...

கண்ணீர் துளிகள்


நினைப்பதெல்லாம் கிடைத்து விட்டால்., 
கண்ணீர் துளிகளுக்கு மதிப்பில்லை..
என்னிடம் மிஞ்சியது கண்ணீர் துளிகளே..

உன்னை எதிரில் பார்த்த நட்களை விட.,.,
உன்னை எதிர் பார்த்த நட்களே அதிகம்.

பிடிச்சிருக்கு..


நித்தம் நித்தம் வரும் கனவுகளில்
சத்தம் இல்லாமல் நுழையும் உன்  நினைவுகள்
கனவில் வரும் எனது வானவில்லை
எட்டி பிடிக்க நினைக்கிறேன் தினந்தோறும்
கண் விழித்து பார்க்கும் பொழுது
முட்டால் ஆனேன்
வேதனையோ பழகிப்போனது
ஏமாற்றமோ புதியதானது..
ஏமாறுவதும் எனக்கு
பிடிச்சிருக்கு.. 


பாவம் என் மனம்
உன்னை கண்டவுடன் 
ஓடி ஒலிகிறது.,
நீ அதை
திருடி விடுவாயோ
என்ற பயம்..

தி கெட்ட காதல்
தவறு என்று தெரிந்தும்
விர்க்க முடியவில்லை.,
மதில் மேல் நடக்கும்
இந்த போராட்டம்
இந்த காதலை
எதிர்க்கவும் முடியவில்லை
ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.,